சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தில்லான்னா மோகனாம்பாள், சலங்கை ஒலி, சங்கராபரணம் போன்று இசையையும், நடனத்தையும் மையமாக கொண்டு உருவாகி வரும் படம் பார்த்தவிழி பார்த்தபடி. சந்தோஷ், பிரணவ் சுரேஷ், பிரசிதா உதய், சாந்தி கிருஷ்ணா, ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி, அனுப்வாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மதுமாட சேரி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் மாடம்பு குஞ்சு முட்டன் இயக்கி இருக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஹீரோ பாடலிலும், ஹீரோயின் நடனத்திலும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அவரவர் துறையில் பெரிய இடத்துக்கு வருகிறார்கள். இருவரும் கூடலாகி பின்பு ஊடலாகி பிரிகிறார்கள். எந்த கலை அவர்களை பிரித்ததோ அதே கலை அவர்களை எப்படி சேர்த்தது என்பதுதான் கதை. பாடல்களை ஜேசுதாசும், சித்ராவும் பாடியிருக்கிறார்கள். நடனத்தை வி.பி.தனஞ்செயன் தம்பதிகள் அமைத்திருக்கிறார்கள். என்றார்.