Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த் - 40 வருடங்கள் நாயகனாக...!

12 டிச, 2018 - 10:19 IST
எழுத்தின் அளவு:
40-years-of-Rajinikanth-:-Happy-Birthday-to-Rajini

இந்தியத் திரையுலகம் வியந்து பார்க்கும் ஒரு நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இன்று அவருடைய 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 40 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டு இந்த வயதிலும் இந்தியத் திரையுலக வசூல் மன்னனாக தொடர்கிறார்.

1975ல் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்தார். பின்னர் இரண்டாவது கதாநாயகனாக உயர்ந்தார். அவரும், கமல்ஹாசனும் இணைந்து நடித்து தங்களது நாயகன் அவதாரத்தை ஒருசேர அடியெடுத்து வைத்தனர்.

1978ல் வெளிவந்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படம் வரை ரஜினிகாந்தின் பெயர் டைட்டிலில் பெரும்பாலும், படத்தின் நாயகன், நாயகி ஆகியோருக்குப் பிறகே இடம் பெற்று வந்தது.

1978ல் வெளிவந்த 'சதுரங்கம்' படத்தில் தான் ரஜினிகாந்தின் பெயர் டைட்டிலில் முதலில் வந்தது. அந்த ஆண்டிலேயே வெளிவந்த 'முள்ளும் மலரும்' படம் ரஜினிகாந்தை பெண்களுக்கும் பிடிக்கும் ஒரு நாயகனாக உயர்த்தியது. அந்த ஆண்டில் மட்டும் ரஜினிகாந்த் நடித்த 16 படங்கள் வெளிவந்தன. அந்த 1978ம் ஆண்டுதான் ரஜினிகாந்திற்கு திருப்புமுனையாக அமைந்த ஆண்டு. அவரை தனி கதாநாயகனாக மாற்றி, அதே ஆண்டில் வெற்றிகரமான கதாநாயகனாகவும் மாற்றியது.

அன்று ஆரம்பித்த அந்த கதாநாயகன் ஓட்டம் இன்று வரை 2.0 படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது, அடுத்து 'பேட்ட' படம் மூலம் அடுத்த ஆண்டும் தொடரப் போகிறது. இடையில் ஏதோ ஒரு சில இறக்கங்கள் வந்தாலும் அது ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையை பெரிதாக பாதித்ததில்லை.

கருப்பு வெள்ளை, வண்ணப்படம், 70 எம்எம் படம், அனிமேஷன் படம், 3டி படம் என தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்ட போதெல்லாம் அதில் ரஜினிகாந்தின் பங்கும் இருந்திருக்கிறது.

தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அவரைப் போன்று 40 ஆண்டு காலமும் இந்தியத் திரையுலகில் வசூலின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்புடன், ஈடுபாட்டுடன், உத்வேகத்துடன் நடிக்கும் ஒரு நடிகரைப் பார்க்க முடியாது என அவருடன் பணியாற்றியவர்கள் எப்போதும் சொல்லும் வார்த்தைகளாக இருக்கும்.

இன்றும் எத்தனையோ புதுப்புது நடிகர்கள் வந்து கொண்டிருந்தாலும் இன்றைய குழந்தைகளுக்கும் பிடித்த ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருப்பதற்கு அவர் என்ன மாயம் செய்கிறார் என்று பல ஹீரோக்கள் வியந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ ஹீரோக்கள் சாதனை செய்திருக்கிறார்கள். அவர்களில் ரஜினிகாந்த் செய்துள்ள சாதனை வேறு யாரும் செய்யாத தனிப்பட்ட ஒரு சாதனை என்பதை மறுக்கவும், மறக்கவும் முடியாது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக கொச்சியில் என்ஜிகேஇறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ... சென்னை சர்வதேச திரைப்பட விழா : தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி சென்னை சர்வதேச திரைப்பட விழா : தமிழக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

KV Pillai - Chennai,இந்தியா
23 ஜன, 2019 - 10:36 Report Abuse
KV Pillai அருமை.
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
14 டிச, 2018 - 11:44 Report Abuse
இந்தியன் kumar இறைவன் அருள் உள்ளவர் தான் இப்படி சூப்பர் ஸ்டார் ஆக ஜொலிக்க முடியும்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
12 டிச, 2018 - 14:10 Report Abuse
Raman Ganesan ONE AND ONLY SUPER STAR
Rate this:
Parthiban V - Tamilnadu,இந்தியா
12 டிச, 2018 - 11:10 Report Abuse
Parthiban V இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே. நீடுழி வாழ்க வளமுடன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in