டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படமான 2.0, நவ.,29ம் தேதி ரிலீஸாகி, உலகம் முழுக்க இரண்டு வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுக்க ரூ.500கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்தாலும் தமிழகத்தில் ஒருவார முடிவில் விஜய்யின் சர்காரை முறியடிக்க முடியவில்லை.
சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் - 32.22 கோடி, 2ஆவது நாள் 20.72 கோடி, 3 ஆவது நாள் - 13.02 கோடி, 4ஆவது நாள் - 9.13 கோடி, 5ஆவது நாள் - 11.50 கோடி, 6 ஆவது நாள் 11 கோடி, 7ஆவது நாள் 5 கோடி... ஆக மொத்தம் சர்கார் படத்தின் 7 நாள் வசூல் - 102 கோடியே 59 லட்சம்.
இதுவரை 1 வாரத்தில் எந்தப்படமும் செய்யாத வசூல் சாதனை இது. ரஜினி நடித்த 2.0 படத்தின் தமிழ்நாடு முதல்வார வசூல் எவ்வளவு தெரியுமா?
1 வது நாள் - 17 கோடி, 2 வது நாள் - 12 கோடி, 3 வது நாள் - 18 கோடி, 4 வது நாள் -18 கோடி, 5 வது நாள் - 7 கோடி, 6 வது நாள் - 6 கோடி,7 வது நாள் 6 கோடி... ஆக மொத்தம் 2.0 படத்தின் முதல் வார மொத்த வசூல் - 84 கோடி.
இதன்மூலம் சர்கார் படத்தின் 1 வார வசூலை 2.0 படம் எட்டவில்லை. அதேசமயம், உலகளவிலான வசூலை பார்த்தால் 2.0வின் பாதி வசூல் தான் சர்கார் என்பது குறிப்பிடத்தக்கது.