பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக நடித்து அதன் மூலம் கஞ்சா கருப்பாக பெயர் மாறி காமெடியன் ஆனவர். ராம், யோகி, சிவகாசி முதல் தொண்டன் வரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனால் அந்தக் கட்சியில் சேரவில்லை. தற்போது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர அரசியல்வாதியாகி இருக்கிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன்னை அதிமுகவின் அடிப்படை தொண்டராக இணைத்துக் கொண்டார். விரைவில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.