மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடத்த 2.0 படம் சமீபத்தில் வெளிவந்தது. படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு தயாரிப்பு தரப்புக்கு திருப்தி தரும் அளவிற்கு வியாபாரமான படம். இன்னும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் திரையிடப்படும்போது தயாரிப்பு தரப்பு லாபம் ஈட்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோசன் பணிகளை இப்போதே தொடங்கி விட்டார்கள். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இதில் ரஜினி காளி என்ற காட்பாதர் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இதற்கு அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினி 2.0 படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்திற்கு படத்தை கொடுத்திருக்கிறார். தன்னை நம்பி பெரிய ரிஸ்க் எடுத்த நிறுவனத்துக்கு பரிசாக இதனை கொடுத்திருக்கிறார்.
விரைவில் ரஜினி அரசியலில் குதிக்க இருப்பதால் இந்தப் படம், பக்கா அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இதை அறிந்து கொண்டதால்தான் தமிழக அரசு ஏ.ஆர்.முருதாஸ் மீது வழக்கு தொடர்ந்து இனிமேல் அரசை விமர்சித்து படம் எடுக்க மாட்டேன் என்று நீதிமன்றம் மூலம் உறுதி வாங்க நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. மன்னிப்பு கேட்க மறுத்து விட்டதோடு இனியும் விமர்சனம் செய்யமாட்டேன் என்பதற்கு உத்தரவாதமும் தர மாட்டேன் என்று கூறிவிட்டார்.
படத்தின் ஒன் லைனை கூறி ரஜினியிடம் சம்மதம் வாங்கிவிட்டார் முருகதாஸ். அதில் என்னென்ன நாட்டு நடப்புகள் வரவேண்டும். உத்தேசமாக என்னென்ன வசனங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் முருகதாசிடம் ரஜினி கூறிவிட்டாராம். படத்தின் தலைப்பு அரசியல் சார்ந்து இருக்க வேண்டும் என்றும் கூறினாராம்.
படத்திற்கு நாற்காலி என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தலைப்புக்கு ரஜினி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஒப்புதல் தந்த பிறகு அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம்.
"நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு" என்று குரு சிஷ்யன் படத்தில் ரஜினி பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.