விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் மீண்டும் 'சீதக்காதி' என்கிற படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்தப்படத்தில் அய்யா ஆதிமூலம் என்கிற வயதான நாடக நடிகர் கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வரும் டிச-2௦ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்தப்படத்தை புரமோட் பண்ணும் விதமாக சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அய்யா ஆதிமூலத்தின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இயக்குனர் மகேந்திரன் சிலையை திறந்து வைத்தார்.
இந்த சிலையுடன் நின்று செல்பி எடுத்து அனுப்பும் 100 பேருக்கு சீதக்காதி படத்தில் பிரீமியர் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
நாம் எழுதி, உருவாக்கிய ஒரு கதாபாத்திரத்திற்கு மெழுகுச்சிலை வைப்பது இது தான் முதல் முறை. 2.0, பாகுபலி போன்ற படங்களில் பணிபுரிந்த விஸ்வநாத் சுந்தரம் தான் விஜய் சேதுபதியின் இந்த ஆதிமூலம் கதாபாத்திரத்தை வடிவமைத்தவர் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.
நமக்கெல்லாம் பிடித்த ஒரு நடிகர் விஜய் சேதுபதி, எனக்கு பிடித்த ஒரு இயக்குனர் பாலாஜி தரணீதரன். அவர் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர். மிகவும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் உழைப்பிக்கு பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் தான் ஒரு இயக்குனரும், நடிகரும் நல்ல படத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் இயக்குனர் மகேந்திரன்.