ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
14வது உலக கோப்பை ஹாக்கி தொடர், இந்தியாவின் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. துவக்க விழாவில் நடிகர் ஷாரூக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கலை மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது.
ஷாரூக்கான் ஹாக்கி விளையாட்டு குறித்து பெருமையாக பேசினார். தனது அப்பாவும் ஒரு ஹாக்கி விளையாட்டு வீரர், அதனால் தான் எனக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்றார்.
தொடர்ந்து நடிகை மாதுரி தீட்ஷித்தின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்தது. ஜெய் ஹோ உள்ளிட்ட ரஹ்மானின் அசத்தல் பாடல்கள் இடம்பெற்றன.
முன்னதாக ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாக ஆல்பம் ஒன்றை உருவாக்கினார் ரஹ்மான். அதில் ஷாரூக்கான், ஏ.ஆர்.ரகுமான், நயன்தாரா ஆகியார் நடித்தனர்.