ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படம் பொங்கல் வெளியீட்டை உறுதி செய்தது. இதனுடன் போட்டியிட எந்தவொரு படமுமே அறிவிக்கப்படாமல் இருந்தநிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'பேட்ட' படம் 'பொங்கல் வெளியீடு' என்று களத்தில் குதித்தது.
இதனால், 'விஸ்வாசம்' படக்குழு முதலில் அதிர்ச்சியடைந்தது. பின்னர் விநியோகஸ்தர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பொங்கல் வெளியீடு சரியாக இருக்குமா என்று கருத்து கேட்டது. பொங்கல் வெளியீடு சரியாக இருக்கும் என்று தெரிவிக்கவே, நவம்பர் 25 அன்று மோஷன் போஸ்டர் மூலமாக பொங்கல் வெளியீட்டை உறுதிசெய்தது.
இதுவரை ரஜினி - அஜித் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியானதில்லை. முதன்முறையாக 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' மோத உள்ளன. பேட்ட படம் களத்தில் இறங்கியதால் விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை வரலாம் என்பதால் சத்தமில்லாமல் ஒரு வேலையை செய்து முடித்துள்ளனர்.
அதாவது சென்னை செங்கல்பட்டு ஏரியாக்கள் தவிர்த்து மற்ற ஏரியாக்களில் சுமார் 400 தியேட்டர்களை ஜனவரி 5 தேதிமுதல் இப்போதே புக் செய்துவிட்டனர். ஜனவரி 10 அன்று தான் விஸ்வாசம் படம் ரிலீஸ். ஆனால் 5 நாள் முன்னதாகவே தியேட்டர்களை புக்கிங் செய்துள்ளனர்.
சரியான போட்டிதான்.