ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்கார் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, கடந்த நவம்பர் 14-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அட்லீ இயக்கவுள்ள, இப்படத்தின் ப்ரீ புரடக்ஷன்ஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அட்லீ.
இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. படத்துக்கு பெயர் சூட்டப்படாததினால் தற்போது 'தளபதி 63' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
விஜய் - நயன்தாரா இருவருமே இணைந்து 'வில்லு' படத்தில் நடித்திருக்கிறார்கள். 'சிவகாசி' படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நயன்தாரா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - நயன்தாரா இணையும் 3-வது படமாக 'தளபதி 63' அமைந்திருக்கிறது.
முழுக்க விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக இந்துஜாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்தப்படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்கவுள்ளார்.