அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ்நாட்டில் நடக்கும் சில முக்கிய விஷயங்களைப் பற்றி எப்போதுமே எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிடுபவர் தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவரது தயாரிப்பில் சித்தார்த்தா இயக்கத்தில் தனஞ்செயா, இர்ரா மோர் நடித்துள்ள 'பைரவ கீதா' படம் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
நவம்பர் 29ம் தேதி 2.0 படம் தெலுங்கிலும் வெளியாவதால் 'பைரவ கீதா' படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ராம்கோபால் வர்மாவுக்கு இருக்கிறது. அதனால் முடிந்தவரை 2.0 படத்தைப் பற்றி ஏதாவது குறையாகப் பதிவிட வேண்டும் என்று நினைத்து அந்தப் படத்தைப் பற்றி அடிக்கடி பேசி வருகிறார்.
நேற்று டுவிட்டரில், “ரோபோட் 2.0 படம் ஒரு பெரிய இயக்குனர் சின்னக் குழந்தைகளுக்காக எடுத்துள்ள சினிமா, பைரவ கீதா ஒரு சின்ன இயக்குனர் பெரியவர்களுக்காக எடுத்துள்ள சினிமா” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2.0 படம் குழந்தைகளுக்கான படம் என அவர் 'டிகிரேட்' செய்ய விரும்புகிறார். இருப்பினும் அதுதான் '2.0' படத்தின் பலம் என்பது ராம்கோபால் வர்மாவுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.