சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சர்கார் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குகிறார். தெறி, மெர்சலுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இதனை 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லு படத்திற்கு பிறகு இருவரும் இணைகிறார்கள். இவர்கள் தவிர யோகி பாபு, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு.
இது விளையாட்டை மையமாக கொண்ட படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் படத்தின் தலைப்பு ஜெர்சி 63 என தகவல் பரவியது. விஜய் கில்லி படத்தில் கபடி வீரராக நடித்தார், இந்தப் படத்தில் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். என்ன மாதிரியான விளையாட்டு என்ற தகவல் வெளியாகவில்லை.
கிரிக்கெட் மற்றும் கபடி விளையாட்டு தொடர்பான நிறைய படங்கள் தயாராகி வருவதால் இதில் இந்த இரண்டைத் தவிர வேறு விளையாட்டு மையமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்குகிறது. சென்னை புறநகர் பகுதியில் இதற்காக விளையாட்டு மைதான செட் போடப்பட்டு வருகிறது. படம் அடுத்த ஆண்டு தீபாவளியன்று வெளிவருகிறது.