ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுதம் மேனன் இயக்கத்தில் தர்புகா சிவா இசையமைப்பில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிப்பில் 2016ம் ஆண்டில் ஆரம்பமான படம் எனை நோக்கி பாயும் தோட்டா.
பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டு பின்னர் நடந்தது. ஒரு கட்டத்தில் இப்படம் தொடர்ந்து நடக்குமா என்று கூட சந்தேகம் எழுந்தது. இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கவுதம் மேனன் அச்சம் என்பது மடமையடா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
படத்தின் டீசரை வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. படத்தின் இசையமைப்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே படத்தின் பாடல்களையும் வெளியிட்டார்கள். அவற்றிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது படத்திற்கான சிக்கல்கள் முடிவடைந்துவிட்டதாம். அதனால் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். தனுஷ் நடித்து வெளிவர உள்ள மாரி 2 படத்திற்குப் பின்னர் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என்கிறார்கள்.