போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

1979ம் ஆண்டு வெளியான படம் நீயா. கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, முத்துராமன், லதா நடித்திருந்தனர். பசி துரை இயக்கினார். இந்த படத்தில் கானகத்தில் காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்த இச்சாதாரி வகை பாம்பில், ஆண் பாம்பை கமல் உள்ளிட்ட நண்பர்கள் கொன்று விட பெண் பாம்பான ஸ்ரீப்ரியா அவர்களை பழிவாங்குகிற கதை.
இதில் பாம்பாக இருக்கும் ஸ்ரீப்ரியாவும், அவர் காதலனும் பாடும் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா..." பாடல் இப்போதும் பிரபலம். கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலை வாணி ஜெயராமும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பாடி இருந்தனர். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.
தற்போது, இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதில் இந்தப் பாடலை ரீமேக் செய்துள்ளனர். படத்திற்கு ஷமீர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஜெய், வரலட்சுமி, கேத்ரின் தெரசா நடித்துள்ளனர். வரலட்சுமி பாம்பாக நடித்துள்ளார். நீயா படத்தில் நிஜ பாம்பு நடித்திருக்கும், இதிலும் 20 அடி நீள பாம்பை நடிக்க வைத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் கிராபிக்ஸ் பாம்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்.சுரேஷ் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் வாங்கியுள்ளது. அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.