சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரஜினியை வைத்து இயக்கிய 2.0' படம் வெளியானதும் கமலை வைத்து இயக்கும் 'இந்தியன்-2' படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் ஷங்கர். '2.0' படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த முத்துராஜே, இந்த படத்திலும் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.
'இந்தியன்-2' படத்திற்கான செட் அமைக்கும் வேலைகளை சமீபத்தில் துவங்கியுள்ளார். இதற்கிடையில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற கேரக்டர்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முக்கியமான ஒரு கேரக்டருக்கு துல்கர் சல்மானை ஷங்கர் தேர்வு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் 'இந்தியன்-2' படத்தில் கமலுடைய கேரக்டருக்கு சற்றே இணையான இன்னொரு கேரக்டர் படத்தில் உண்டு என்றும், அந்த கேரக்டரில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவை ஷங்கர் அணுகியதாக தகவல். ஏற்கனவே நண்பன் படத்தில் நடிக்க சிம்புவை அணுகினார் ஷங்கர். அடபபோது நடிக்க மறுத்தார் சிம்பு.
இப்போது இரண்டாவது தடவையாக சிம்புவை அழைத்திருக்கிறார் ஷங்கர். இந்த வாய்ப்பையாவது சிம்பு பயன்படுத்திக்கொள்வாரா பார்ப்போம்.