Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் : விஜய்க்கு அமைச்சர் எச்சரிக்கை

07 நவ, 2018 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Sarkar-:-Minister-Kadambur-raju-warns-Vijay

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்துள்ள சர்கார் படம். முழுக்க முழுக்க அரசியல் பேசுகிறது. குறிப்பாக இன்றைய அரசியல் நிலவரத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், மற்றொருபுறம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.

இந்நிலையில் சர்கார் படம் தொடர்பாக விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது : சர்கார் படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அவற்றை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்து வரும் நடிகரான விஜய், இதுபோன்று நடித்திருப்பது நல்லதல்ல என கூறியுள்ளார்.
ஹெச்.ராஜா சூசக விமர்சனம்


பா.ஜ.வின் ஹெச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது : "படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, நல்ல கதையா திருடுங்கடா". விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி உள்ள படம் சர்கார். இப்படம் தான் சமீபத்தில் கதை திருட்டு பிரச்னையில் சிக்கியது. அப்படி பார்க்கையில் இவரின் பதிவு, சர்கார் படத்தை குறிப்பதாகவே தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (42) கருத்தைப் பதிவு செய்ய
இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் : கமல்இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் ... மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரம்பா மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரம்பா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (42)

krish - chennai,இந்தியா
08 நவ, 2018 - 10:28 Report Abuse
krish நிஜத்தை எதிர்கொண்டு போராட துணிவில்லாத தொடை நடுங்கி சர்க்கார் பட கோழைகள். புரட்சி தலைவியின் நிழலை அடிக்க துணிந்து, விமர்சித்து மகிழ துடிக்கிறார்கள். அதன் மூலம் பட வசூலை அதிகரிக்க எண்ணுகிறார்கள். மறைந்த அவரை விமர்சித்தும் பணம் பண்ண துணிந்துள்ள இவர்களை விட, பிறர் எச்சில் உணவை உண்ணும் ஜீவன்கள் மேல். அவை நன்றி உடையவை. நன்றியுள்ள தமிழக மக்கள் மன்றம் இவர்களுக்கு சரியான பாடம், சரியான தருணத்தில் புகட்டும் என்பதில் சிறிதளவிலும் ஐயம் இல்லை.
Rate this:
Tamilan Mansoor - chennai,இந்தியா
08 நவ, 2018 - 10:24 Report Abuse
Tamilan Mansoor சர்க்கார் படம மக்களுக்கு ஓர் நல்ல கருத்தை தெளிவுப்படுதி இருக்கு , இதில் வரும் சில விஷயங்கள் மக்களுக்கு தெரிந்தாலும் மக்கள் அதை மறந்து விடுகிறார்கள். நான் Vijay ரசிகன் அல்ல ஆனால் நல்ல விஷத்தை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Loganathan Balakrishnan - Salem,இந்தியா
08 நவ, 2018 - 09:35 Report Abuse
Loganathan Balakrishnan படம் நல்லா இருக்கோ இல்லையோ ஆனால் படத்தில் நல்ல விஷயம் நிறைய இருக்கு நம் மக்கள் அதை உணர வேண்டும் விஜய் சொல்வது போல் நல்ல தலைவர்கள் நாம்தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் ஆனால் எங்க இருக்காங்க என்று தெரியவில்லை
Rate this:
Tamil Selvan - Chennai,இந்தியா
08 நவ, 2018 - 09:12 Report Abuse
Tamil Selvan கடந்த 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாகிறது. அதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு GST வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. அந்த மெர்சல் படத்தில் GST பற்றிய காட்சி ஒன்று வரும். அதாவது இந்தியாவில் இருக்கும் மொத்த GST வரி விதிப்பில் ஒரு சில பொருளுக்கு மட்டும்தான் 28 சதவிகிதம் வரி விதிப்பு இருக்கிறது. அந்த உண்மை எல்லாம் தெரியாமல் ஜோசப் விஜய் வீர வசனம் பேசுவார். "ஏழு சதவிகிதம் GST வாங்கிற சிங்கப்பூர் மக்களுக்கு மருத்துவத்தை இலவசமா தரப்ப, 28 சதவிகிதம் GST வாங்கிற நமது அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியல" என்று கேட்பார். அதை பார்த்து இங்குள்ள விசில் அடிச்சான்கள் எல்லோரும் கை தட்டுவார்கள். சிங்கப்பூரின் இந்த வளர்சிக்கு 50 ஆண்டுகாலம் எடுத்து இருக்கிறது. GST வரி விதித்து மூன்றே மாதத்தில் இந்தியா ஏன் சிங்கப்பூர் மாதிரி வ(ள)ரவில்லை என்று வீர வசனம் பேசுகிறார் இவர். GST வரி விதித்து மூன்றே மாதத்தில் எப்படி இந்தியா சிங்கப்பூராகும் என்று கை தட்டிய ஒருவன் கூட அதை யோசிக்கவில்லையே அதுதான் ஒரு நடிகனின் திறமை. அதை எல்லாம் பார்த்து முட்டாள் மக்கள்தான் கை தட்டி சந்தோசப்படலாம். அப்படி யோசிக்கும் திறமை மட்டும் இருந்து இருந்தால் 50 ரூபாய் சர்கார் பட டிக்கட்டை 500-ரூபாக்கும் 1000-ரூபாக்கும் கள்ள டிக்கெட் விற்பதை தடுக்க முடியாத இந்த நடிகன் படத்தில் மட்டுமே லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்கும் இவரின் லச்சனம், நிஜ அரசியலில், நிஜ அரசாங்கத்தில் லஞ்சத்தையும் ஊழலையும் எப்படி இவர் ஒழிக்க முடியும் என்று யோசித்து இருப்பார்களே மக்கள்.
Rate this:
தினமலம் வாசகர் - Chennai,இந்தியா
08 நவ, 2018 - 09:07 Report Abuse
தினமலம் வாசகர் வேஸ்ட் அமைச்சர்கள்
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in