ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
2.0 டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அக்சய் குமார் பேசியதாவது : தமிழில் பேச 2 முதல் 3 மணிநேரம் வரை பயிற்சி எடுத்தேன். தமிழில் பேசுகிறேன், உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். வணக்கம் சென்னை, மகிழ்ச்சி. ரஜினி, ஷங்கர், ரஹ்மான் உடன் 2.0 படம் பண்ணியதை பெருமையாக கருதுகிறேன். தமிழக மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
அக்சய் குமாரிடம் விஷால், உடலை பிட்டாக வைத்திருப்பது கேட்டார். இதற்கு பதிலளித்த அக்சய், நான் தினமும் காலை 4 மணிக்கே எழுந்து விடுவேன். ஜிம் போவேன், நான் சொந்தமாக ஜிம் வைத்துள்ளேன். சின்ன வயதிலிருந்து தொடருகிறேன். என் குடும்பத்தார் யாரும் கட்டாயப்படுத்தி இதை செய்யவில்லை, நானே மகிழ்வுடன் செய்கிறேன்.
விஷால், அரிசி தொடர்பான உணவுகள் உண்ணவில்லை என்று கேள்விப்பட்டேன். உங்கள் அம்மாவை மகிழ்விக்க வாரம் ஒருமுறையாவது அவர் சமைத்து தரும் இட்லி, தோசையை உண்ணுவுங்கள். அவருக்கும் மகிழ்ச்சியை தரும். என் உடல் தான் எனது கோவில்.
இப்படத்திற்காக நிறைய சவால்களை சந்தித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் ஒரு ஜீனியஸ். என் ஒட்டுமொத்த திரை வாழ்வில் போட்ட மேக்கப்பை இந்த ஒரு படத்திற்காக போட்டுள்ளேன். படத்தில் நடிக்கும்போது நிறைய வலிகள் இருந்தாலும், திரையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அக்சய் குமார் பேசினார்.