ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிபி சத்யராஜ் நடித்த சத்யா படத்தை அடுத்து அவரது நடிப்பில் 'ரங்கா' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சிபி நடிக்கும் மற்றொரு படம் 'மாயோன்'. கிஷோர் இயக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார்.
இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில் தான்யா ரவிச்சந்திரன் தேர்வாகியுள்ளார். சசிகுமாருடன் 'பலே வெள்ளையத்தேவா', அருள் நிதியுடன் 'பிருந்தாவனம்', விஜய் சேதுபதியுடன் 'கருப்பன்' ஆகிய படங்களில் நடித்துள்ள தான்யா ரவிச்சந்திரன், மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி.
சசிகுமார், விஜய்சேதுபதி, அருள் நிதியைத் தொடர்ந்து தன்னுடைய நான்காவது படத்தில் சிபி சத்யராஜுடன் இணைந்திருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன். தேடி வரும் எல்லாப் படங்களையும் ஏற்காமல் கதை கேட்டு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.