அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம். அஜித் உடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது. விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியானது. அதில் ஒன்றில் முதிர்ச்சியான வேடத்திலும் மற்றொன்றில் இளமையான வேடத்திலும் அஜித் அசத்தியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியானது. அஜித் புல்லட்டில் செம ஜாலியாக வர அவரை பின்னணியில் ஏராளமான மக்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்பது போன்று உள்ளது. அநேகமாக பைக் ரேஸ் போட்டியில் அஜித் வெற்றி பெற்றதன் உற்சாகமாக இருக்கலாம் என இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது.
கிராமமும், நகரமும் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் விஸ்வாசம் படம், பக்கா கமர்ஷியலாக உருவாகி உள்ளது. பொங்கலுக்கு படம் ரிலீஸாவதை மீண்டும் இந்த இரண்டாவது போஸ்டர் உறுதி செய்திருக்கிறது.