அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! |
கவிஞர் வைரமுத்து பாலியல் ரீதியாக என்னை அணுகினார், மிரட்டினார் என பாடகி சின்மயி கூறிய சம்பவம் திரையுலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தொடர்ந்து வைரமுத்து மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அதோடு காலையில் இதுதொடர்பாக நீண்டதொரு விளக்கத்தையும் பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி கூறியதாவது : பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது குற்றம் சுமத்தவில்லை. அந்த சம்பவம் நடந்தது உண்மை. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரத்திற்கு இப்போது ஆதாரம் கேட்பது முறையற்றது. அதற்கான ஆதாரங்கள் இல்லை.