ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை மேனகாவின் மகள். கமர்ஷியல் ஹீரோயினாக வளரும் அதே நேரத்தில் நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து நடிப்பிலும் தன்னை நிரூபித்தவர். இன்றைய தேதியில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின்.
அவர் நடித்து முடித்துள்ள சண்டக்கோழி 2ம் பாகம் ஆயுத பூஜைக்கு வெளிவருகிறது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது அம்மா மேனகா மற்றும் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்தார். இங்குள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடிய கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், பின்னர் ராமநாதசுவாமி, பருவதவர்த்தினி அம்மன் சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் பிரமாண்டத்தைக் கண்டு மகிழ்ந்தார்.
"கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட பயணம் இது. அவரது வேண்டுதல் ஒன்றை நிறைவேற்றவும், தனது குடும்பத்தினர் நலனுக்கு வேண்டுதல் செய்யவும் வந்துள்ளார்" என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.