இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல் கேமரா” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். இது குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறியதாவது:
நான் பிறந்து வளர்ந்தது சென்னை தான். எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை. எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரி செல்வராஜ். “பரியேறும் பெருமாள்” கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கட வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்தது. அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள், தெருக்கள், வெயில் மனிதர்கள் ,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேண்டும், கூடவே ஒரு அழகியலும் இருக்க வேண்டும் என்கிற ஆசை. கதைக்களம், அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.
கிம்பல் தொழில்நுட்பம் என்பது கேமராவை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தாமல் அதை உடலில் பொருத்திக் கொண்டு பல கோணங்களில் படம் எடுப்பது. 40 கிலோ எடை கொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும் படம் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது. எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம்.
மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது, திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும், அழகையும் இந்த படத்தில் பெரிதும் எதிர் பார்க்கலாம். என்றார் ஸ்ரீதர்.