ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை ஏற்று, அவருடன் நேரத்தை செலவிட்டு நெகிழச் செய்துள்ளார் நடிகர் சூர்யா.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சிறுவன் தினேஷ் (16). 10 வயது இருக்கும் போது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் தினேஷ், நன்கு ஓவியம் வரையும் திறன் கொண்டவர். ஏராளமான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். இவர், நடிகர் சூர்யாவின் ரசிகர். அவரை பார்க்க வேண்டும் என்பது ஆசை.
தினேஷின் ஆசையை அறிந்த சூர்யா, அவரது இல்லத்திற்கு வரவழைத்து தினேஷ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தினேஷூடன் நேரம் செலவிட்ட சூர்யா அவருடன் கொஞ்சி மகிழ்ந்தார். மேலும் தினேஷின் மருத்துவ செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ள சூர்யா, தினேஷ்க்கு ஏராளமான பரிசு பொருட்களையும் வழங்கினார்.
சூர்யாவின் தந்தை சிவகுமார் தான் வரைந்த ஓவியம் ஒன்றையும் தினேஷூக்கு பரிசாக வழங்கினார். தினேஷ் உடன் அவரது பெற்றோர்களுடன் சென்றிருந்தனர்.