அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இசையமைப்பாளர் இளையராஜா மீது பெங்களூருவைச் சேர்ந்த இந்திய கிறிஸ்துவ புதுப்பித்தல் என்ற அமைப்பு பெங்களூரு 8-வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் கிரிகோரி அசோக் ஆரோக்கியசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
இசை அமைப்பாளர் இளையராஜா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பேசும்போது கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு கோடிக்கணக்காக கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகை (உயிர்த்தெழுதல்) குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். இது கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் மனதை காயப்படுத்தி உள்ளது. அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவரின் கருத்துக்கள் இருந்தது.
எனவே இளையராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 9ந் தேதி நடக்கும் என்று அறிவித்தது.