சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகைகளான நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு முன்னதாகவே, தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்தவர் த்ரிஷா. ஆனாலும், தனி ஹீரோயினாக நயன்தாரா அளவிற்கு த்ரிஷாவால் வெற்றி பெற முடியவில்லை.
நயன்தாரா, த்ரிஷா இருவரும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தான் திரையுலகத்தில் நாயகியாக அறிமுகமானார்கள். ஆனால், நயன்தாரா இன்னமும் ஒரு உச்ச நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தனி நாயகியாக நடித்த படங்கள் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளன. அந்த ராசி த்ரிஷாவுக்கு அமையவில்லை. அவர் தனி நாயகியாக நடித்த 'நாயகி, மோகினி' ஆகிய படங்கள் படுதோல்விப் படங்களாக அமைந்தன.
நயன்தாரா வழியில் தற்போது தனி நாயகியாக சமந்தா நடித்து வெளிவந்த 'யு டர்ன்' படம் தமிழ், தெலுங்கில் நல்ல விமர்சனத்துடன், வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. சீனியர் நடிகையாக இருந்தாலும் த்ரிஷாவுக்குக் கிடைக்காத தனி நாயகி வெற்றி சமந்தாவிற்குக் கிடைத்துவிட்டது.