ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகம் அடுத்து வர இருக்கும் இந்த வருடத்தின் பதினைந்து வாரங்களில் பலத்த போட்டியை சந்திக்க உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு பெரிய படம் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இதனால், மற்ற சிறிய படங்கள் கடுமையாக பாதிப்படைய வேண்டியதும் நடக்கலாம்.
இந்த வாரம் செப்டம்பர் 13ம் தேதி 'சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்களும், செப்டம்பர் 27ம் தேதி 'செக்கச் சிவந்த வானம்' படமும் வெளியாக உள்ளன. இடையில் 21ம் தேதி மட்டும் சில சிறிய படங்கள் வெளியாகலாம். ஆனாலும், அவற்றால் அடுத்த வாரம் வரை தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
அக்டோபர் மாதத்தில் 5ம் தேதி '96', 'ராட்சசன்' படங்களும், அக்டோபர் 17ம் தேதி 'வட சென்னை' படமும் 18ம் தேதி 'சண்டக்கோழி 2, காற்றின் மொழி' படங்களும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலே சொன்ன படங்களைத் தவிர செப்டம்பர், அக்டோபர் வெளியீடுகளில் 'சாமி ஸ்கொயர், நரகாசூரன், கீ, தடம், ஆண் தேவதை, பார்ட்டி, வண்டி, பேரன்பு, ஜருகண்டி', உள்ளிட்ட பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றோடு சுமார் 20 படங்களும் அடுத்த சில வாரங்களில் வெளியாக போட்டி போட உள்ளன.
கோடை விடுமுறை சமயத்தில் திரையுலக ஸ்டிரைக்கினால் சுமார் 50 படங்கள் வெளியீடு தள்ளிப் போனதால் தற்போது இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவற்றை சமாளிப்பது நிச்சயம் சவாலான விஷயமாகத்தான் இருக்கும்.