ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் வெளியான எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விவேக் ராஜகோபால். தற்போது வளர்ந்து வரும் நடிகரான இவர், கூத்துப் பட்டறையில் குரு சோமசுந்தரத்திடம் நடிப்பு பயின்றவர். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சென்னை தான் சொந்த ஊர். ஆஸ்ரம் ஸ்கூலில் படித்தேன். கல்லூரிப் படிப்பு லயோலாவில் போனது. சினிமா ஆசை விடாமல் என்னைத் துரத்தியது, . கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன், எனக்கும் பயிற்சி அளித்தவர் 'ஜோக்கர்' பட நாயகன் குரு சோமசுந்தரம் .
நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன். இந்தப் படம் 'எச்சரிக்கை' உருவாக இருப்பது அறிந்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன். அவர் நடிகர்களைத் தேர்வு செய்யும் போது நானும் கூடவே இருந்தேன். ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். இந்தப் படத்துக்காக சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பில் லந்து கொண்டேன். படத்தை பார்த்துவிட்டு இயக்குநர்கள் கவுளதம் மேனன். ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கி நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சித்தார்த் என்று தொடர்ந்து பலரும் டுவிட்டரில் என்னையும் டேக் செய்திருந்தார்கள், அது மறக்க முடியாதது" என்கிறார்,
நான் ஒரு நடிகன். நான் ஒரு இயக்குநரின் நடிகன். இப்படி அறியப்படவே ஆசை. நல்லதோ கெட்டதோ எப்படிப்பட்ட பாத்திரமும் ஏற்கத் தயார், என்னை விட என் பாத்திரம் பேசப்படட்டும். இதுவே என் விருப்பம் கனவு எல்லாமே. என்கிறார் விவேக் ராஜகோபால்.