அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பழம்பெரும் காமெடி நடிகர் ராக்கெட் ராமநாதன். "ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், வளர்த்தகடா, மண்சோறு, கோயில்யானை, நாம், வரம்" உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகள் பெற்றவர்.
இன்றைக்கு நிறைய மிமிக்ரி கலைஞர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் முதன் முதலில் மேடைகளில் மிமிக்ரி செய்தவர் ராக்கெட் ராமநாதன். தகர எண்ணை டின்னில் இசை அமைத்துக் கொண்டே பாடக்கூடியவர். சினிமாவில் நடித்ததை விட மேடைகளிலேயே அதிகம் நகைச்சுவை செய்தவர். பல மிமிக்ரி கலைஞர்களை உருவாக்கியவர்.
74 வயதான ராக்கெட் ராமநாதன், சில மாதங்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்பாலா என்ற மகளும், சாய்குருபாலாஜி என்ற மகனும் உள்ளனர். ராயப்பேட்டை சீனிவாசா தெருவில் உள்ள வீட்டில் இறுதி சடங்குகள் நடக்கிறது. இன்று மாலை உடல் தகனம் நடக்கிறது.