என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

1980களில் கனவு கன்னியாக இருந்தவர் ஜெயப்பிரதா. தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் பின்னாளில் பாலிவுட்டிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். சில காலம் அரசியலிலும் சாதித்த ஜெயப்பிரதா, தற்போது அடுத்த அவதாராமாக சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். ஹிந்தி முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பெர்பெக்ட்பதி என்ற தொடரில் நடிக்கிறார், இதுபற்றி அவர் கூறியதாவது
பல ஆண்டுகளாகவே என்னை சீரியலில் நடிக்க அழைத்தார்கள். நான்தான் மறுத்து வந்தேன். பெர்பெக்ட்பதியின் கதையும் கேரக்டரும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் நான் மாமியாராக நடிக்கிறேன். இது சீரியல்களில் வரும் வழக்கமான மாமியார் கேரக்டர் இல்லை. முற்போக்கு சிந்தனையுள்ள மாமியாராக நடிக்கிறேன்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும். டி.வி தொடர்கள் தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது. நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.