ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வழக்கமாக அஜித் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸாகிறதென்றால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு இருக்கும். அன்றைய இரவு அதை டிரெண்டிங்கில் கொண்டு வருவதோடு, ஒரு சில நாட்களுக்கு அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும்.
அஜித் நடித்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை பெரும்பாலும் நள்ளிரவு 12.01 மணிக்குதான் வெளியிடுவார்கள். சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்துக்கு ஒருபடி மேலேபோய், இன்று அதிகாலை 3.40 மணியளவில் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
வழக்கமான வியாழக்கிமை சென்டிமென்ட்டை பின்பற்றியவர்கள் நேரத்தை மாற்றியது ஏன்? பிரம்மமுகூர்த்தத்தில் 'விஸ்வாசம்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டும் என்று ஜோதிடர் நேரம் குறித்துக் கொடுத்தாராம். அதன்படியே அதிகாலை 3.40க்கு பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'விஸ்வாசம்' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த ப்ர்ஸ்ட் லுக்கைப் பார்க்கும்போது சிட்டியும், வில்லேஜும் கலந்த கலவையாக 'விஸ்வாசம்' படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. விஸ்வாசம் படத்தை 2019 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருப்பதை உறுதி செய்துள்ளது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்.