ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் த்ரிஷா. கமல், விஜய், அஜித் என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இருப்பினும் ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது. தற்போது அதுவும் நிறைவேறி உள்ளது.
காலா படத்தை தொடர்ந்து ரஜினி, கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 165-வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் அவருடன் சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்து வரும் நிலையில் இருப்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளது. ஆக, ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற த்ரிஷாவின் நீண்டநாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது.