மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
தமிழ் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள், குடிக்கும் காட்சிகள் வந்தால் எச்சரிக்கை வாசங்கள் இடம் பெறுவது போல இனிமேல் தரமற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் எச்சரிக்கை விட வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நயன்தாரா. அவர் நடிக்கும் படம் என்றாலே அதற்கென்று ஒரு தனி இமேஜ் இருக்கும். நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் மறந்து அவருடைய படங்களை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.
தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்யம்' படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்த பிறகும், 'அறம்' படத்தில் நடித்த பிறகும் நயன்தாராவுக்கான இமேஜ் பல மடங்கு அதிகரித்தது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிக சம்பளம் கிடைத்தது என்பதற்காக 'கோலமாவு கோகிலா' படத்தில் போதைப் பொருளைக் கடத்தும் ஒரு பெண்ணாக கடத்தல்வாதி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
போதைப் பொருளை அதிகம் பயன்படுத்துவது இளம் வயதினர்தான் என்பது நயன்தாராவுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அந்தப் படம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூடத் தெரியாமல் அவர் 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
சினிமாதான் என்றாலும் அதில் ஒரு 'அறம்' வேண்டாமா ? என்று நயன்தாராவின் நடுநிலை ரசிகர்கள் கேள்வி கேட்கிறார்கள்.