Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்'

15 ஆக, 2018 - 16:17 IST
எழுத்தின் அளவு:
Saamy-Square-no-1-trailer-in-2018

2018ம் ஆண்டின் 8வது மாதத்தின் 15வது நாளில் இன்று இருக்கிறோம். இந்த வார வெள்ளிக்கிழமை, நாளை மறுநாள் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் படங்களையும் சேர்த்தால் 2018ம் ஆண்டின் படங்களின் எண்ணிக்கை 100ஐத் தொட்டுவிடும். இதற்கடுத்த மூன்றரை மாதங்களில் எப்படியும் 100 படங்கள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையிலும் வெளிவந்த திரைப்படங்களின் டிரைலர்களில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட டிரைலராக விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாமி ஸ்கொயர்' படம் இருந்தது. ஆனாலும், அந்த டிரைலர்தான் இந்த ஆண்டில் வேறு எந்தப் பட டிரைலரும் புரியாத சாதனையை யு டியூபில் படைத்துக் கொண்டிருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே அதன் பார்வைகளின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டில் பெரிய படம் என எதிர்பார்க்கப்பட்ட 'காலா' படத்தின் டிரைலர் கூட 1 கோடியே 29 லட்சம் பார்வைகளைத்தான் பெற்றுள்ளது. இதற்கடுத்து 'டிக் டிக் டிக்' பட டிரைலர் 96 லட்சம் டிரைலர்களைப் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படங்களான 'கடைக்குட்டி சிங்கம்' 38 லட்சம் பார்வைகளையும், 'இரும்புத் திரை' 39 லட்சம் பார்வைகளையும் தான் பெற்றுள்ளது. சமீபத்திய வெற்றிப் படமான 'பியார் பிரேமா காதல்' டிரைலர் 55 லட்சம் பார்வைகளையும், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விஸ்வரூபம் 2' டிரைலர் 73 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. மற்ற சில படங்களிள் டீசர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன, டிரைலர்கள் வெளியாகவில்லை.

மேலே சொல்லப்பட்டுள்ள கணக்கைப் பார்த்து, ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதன் யு டியூப் பார்வைகளிலும், டுவிட்டர் டிரென்டிங்கிலும் இல்லை என்பதை அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி. கதை நன்றாக இருந்தால்தான் ஒரு படம் வெற்றி பெறும் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதைத்தான் 'கடைக்குட்டி சிங்கம், இரும்புத் திரை' ஆகிய படங்களின் வெற்றி மீண்டும் புரிய வைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
யுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்புயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு ... கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

KayD - Mississauga,கனடா
16 ஆக, 2018 - 20:45 Report Abuse
KayD ஹரி கிட்ட ellorum unga padam para para nu irukunu solli irukaanga pola.. oru normal padathai fast forward mode la paatha effect thaan iruku.. Sumo car uku tyre Sammy padam ku square Hero vilram live wire Hari padam naa fire eriya poghuthu viewers vayar.
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
16 ஆக, 2018 - 10:10 Report Abuse
rajinidasan காலா பட ட்ரைலர் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு 10 நாள் முன்னாடி தான் ரிலீஸ் ஆச்சு... அப்புறம் படமே வந்துடுச்சி... சாமி 2 ட்ரைலர் ரிலீஸ் ஆகி பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் படம் ரிலீஸ் ஆகலை... இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையா... ரஜினி என்றால் உங்களுக்கு இளக்காரமாக போய்விட்டது... எப்ப பார்த்தாலும், ரஜினி படம் வெற்றியடைந்தாலும் அதை குறை சொல்லி சந்தோசபடுவது உங்கள் குணம்...
Rate this:
Kasi -  ( Posted via: Dinamalar Android App )
15 ஆக, 2018 - 16:44 Report Abuse
Kasi Kaala teaser reached 30M ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in