சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி உள்ள படம் சீமராஜா. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடத்துகிறார் ராஜா.
மதுரை, தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்.
இந்த படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம்.
ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என தயாரிப்பாளர் ராஜா கூறியிருக்கிறார்.
முன்னதாக வருகிற ஜூலை 25-ம் தேதி வாரேன் வாரேன் சீமாராஜா என்ற ஒற்றை பாடலை ரிலீஸ் செய்கின்றனர். செப்., 13-ம் தேதி படம் ரிலீஸாகிறது.