நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, தங்கமீன்கள் சாதனா, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் பேரன்பு. யுவன் இசையமைப்பில் தேனப்பன் தயாரித்திருக்கிறார்.
பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ரிலீஸ்க்கு தயாராகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது....
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இருட்டு அறையில் பார்க்க வேண்டிய படம், பேரன்பு சூரிய வெளிச்சத்தில் பார்க்க வேண்டிய படம். ராம் எல்லோருடைய இயக்குநராகவும் மாறிவிட்டார். தேனப்பன் இதுவரை தயாரித்தது எல்லாம் படங்களே இல்லை, இது தான் அவர் தயாரித்த உண்மையான படம்.
இந்த கதைக்கு மம்மூட்டியை தேர்வு செய்ததற்காகவே முதலில் ராமை பாராட்ட வேண்டும். இந்தப்படத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் பயந்திருப்பேன். மம்மூட்டி கொஞ்சம் இளமையாக இருந்து நான் பெண்ணாக இருந்திருந்தால் அவரை காதலித்திருப்பேன். ஒருவேளை அவர் பெண்ணாக இருந்திருந்தால் நான், அவரை ரேப் செய்திருப்பேன்.
இவ்வாறு மிஷ்கின் பேசினார்.