ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் 2016-ம் வெளியான படம் 'தேவி'. தமன்னா ஹீரோயினாக நடித்த ஹாரர் காமெடி வகையைச் சேர்ந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸானது.
அதன்பிறகு பிரபுதேவா நடித்த குலேபகாவலி, மெர்குரி ஆகிய படங்கள் படு தோல்வியடைந்தன. ஆனாலும் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, தற்போது 'யங் மங் சங்', 'சார்லி சாப்ளின் 2', 'காமோஷி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
'தபாங் 3' ஹிந்திப் படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் பிரபுதேவா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 'தேவி' படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'லக்ஷ்மி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபுதேவா.
நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், கோவை சரளா, சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா - ஏ.எல்.விஜய் இருவரும் 'தேவி 2' படத்துக்காக மீண்டும் இணைகின்றனர். இது தேவி படத்தின் தொடர்ச்சியா அல்லது வேறு கதையா என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை.