ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இப்போதெல்லாம் அடல்ட் காமெடி படங்களில் நடித்தால் தான் திடீர் விளம்பரம் கிடைக்கிறது. ஒரே ஒரு அடல்ட் காமெடி படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார். அவர் நடித்துள்ள மணியார் குடும்பம் படம் வெளிவர இருக்கிறது. அவர் வெளியில் வந்ததும் 3 படங்கள் அவருக்காக காத்திருக்கிறது. அந்த வரிசையில் இப்போது சேர்ந்துள்ளார் மனிஷாஸ்ரீ.
இருக்கு ஆனா இல்ல படத்தின் மூலம் அறிமுகமான மனிஷாஸ்ரீ, அதன் பிறகு போங்கு, வீர சிவாஜி படங்களில் நடித்தார். இதனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது அவர் வெர்ஜின் பசங்கடா என்ற அடல்ட் காமெடி வெப் சீரியலில் நடித்து வருகிறார்.
மனீஷாவின் கிளாமரும், டபுள் மீனிங் வசனங்களும் இந்த சீரியலில் நிறைந்திருப்பதால் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில் மனீஷாஸ்ரீ நிஷா ஹோத்தாரி என்ற மும்பை பெண்ணாக நடிக்கிறார். இந்த தொடரின் மூலம் கவனம் ஈர்த்துள்ள மனிஷாஸ்ரீக்கு இப்போது சினிமா வாய்ப்புகளும் வருகிறது. அதில் ஒன்று அடல்ட் காமெடி சினிமா. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.