பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் |

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைப்பிடித்த காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறிவிட்டு, இப்போது அதை மீறிவிட்டார் என அவர் மீது கண்டன குரல்களும் எழுந்தன.
சில தினங்களுக்கு முன்னர் பொது சுகாதாரதுறை, உடனடியாக அந்த போஸ்டரை நீக்க வேண்டும் எச்சரித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போஸ்டரை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் நீக்கியது. இருந்தாலும் ஏற்கனவே வெளியான புகைப்பட ஸ்டில்களை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கில் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தியதற்கு விஜய், முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகியோர் தலா ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தமது மனுவில் கூறியிருந்தார்.




