ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யாவின் '2D ENTERTAINMENT' நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், அர்த்தனா பினு, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, பொன்வண்ணன், ஸ்ரீமன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை, விவசாயத்தை எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்திருக்கிரார். சமீபத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு அனைவரும் பார்க்க தகுதியான படம் என்பதை குறிக்கும் 'U' சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா? 'பசங்க' படம் முதல் 'கடைக்குட்டி சிங்கம்' படம் வரை பாண்டிராஜ் இயக்கியுள்ள 8 திரைப்படங்களுமே 'U' சான்றிதழ்களைத்தான் வாங்கியுள்ளனது.
'கடைக்குட்டி சிங்கம்' இம்மாதம் 13 அன்று வெளியாகவிருக்கிறது.