சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபு தேவா நடித்த ஹிந்திப் படமான ஏபிசிடி பெரிய வெற்றி பெற்றது. இது நடனம் தொடர்பான படம். அதேபோன்று ஒரு தமிழ்படம் லட்சுமி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதனை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், நடிக்கிறார்கள். இவர்களுடன் பேபி டித்யா பாண்டே நடிக்கிறார். டித்யா, பிரபுதேவாவின் மாணவியாக நடிக்கிறார். நடன காட்சிகளில் பிரபுதேவாவையே மிரள வைத்திருக்கிறார் டித்யா. இதுகுறித்து ஏ.எல்.விஜய் கூறியிருப்பதாவது:
நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. லக்ஷ்மி பிரத்யேகமாக நடனத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படம். நடனம் என்பது ஒரு சிறந்த கலை வெளிப்பாடாகும். பிரபுதேவாவை தவிர வேறு யார் சர்வதேச தரத்துக்கு நடனத்தை வெளிப்படுத்த முடியும். லக்ஷ்மி நடனத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு குருவுக்கும், நடனத்தை சுவாசிக்க துடிக்கும் ஒரு சிஷ்யைக்கும் இடையேயான உண்மையான பிணைப்பை காட்டும் படம்.
நடனக்கலையை முடிந்த வரை முழுமையாக கொடுத்திருக்கிறோம். படத்தில் என்ன இருக்கும் என்ற ஒரு ஆவலை டிரைலர் ரசிகர்களுக்கு உருவாக்கி இருக்கும் என நம்புகிறோம். பிரபுதேவா தனது கேரியரில் மிகச்சிறந்த உழைப்பு என்று சொல்லும் அளவுக்கு மிகச்சிறந்த ஒன்றை இந்த படத்தில் வழங்கியுள்ளார்.
பேபி டித்யா சூப்பர் சென்சேஷனல் சிஷ்யையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் உண்மையில் திரையில் கலக்கியிருக்கிறார். அவர் பிரபுதேவாவையே நடனத்தில் வியக்க வைத்திருக்கிறார். லட்சுமி நடனம் சர்வதேச தரத்திலும், எமோஷன் இந்திய தரத்திலும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்கிறார் இயக்குனர் விஜய்.