‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சமீபத்தில் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது.
விஜய் புகைப்பிடித்தபடி போஸ்டர் இருந்ததால் விமர்சனங்கள் எழுந்தன. புகைபிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறிய விஜய், இப்போது அதை மீறி துரோகம் செய்துவிட்டார் என பா.ம.க.,வின் அன்புமணி கூறினார். தொடர்ந்து அக்கட்சியின் ராமதாஸ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடிவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மேலும் புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சினிமா துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
சுகாதாரத்துறையின் நோட்டீஸிற்கு சர்கார் படக்குழு பணிந்துள்ளது. இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடித்த சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது.