ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கற்கண்டு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தாத்தாவைப்போன்று அந்தப் படத்தில் காமெடி ஹீரோவாக நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் கஜேஷ், ஸ்கூல் கேம்பஸ் என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார்.
இந்தப்படத்தை ஏ.எம்.என் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.ராமநாராயணா தயாரித்து, இயக்குவதோடு அவரே முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார். கஜேசோடு, ராஜ்கமல், கீர்த்தி, காயத்திரி, மதன்பாப், டெல்லி கணேஷ், ரிந்து ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். திரைக்கதை, வசனத்தை வி.கே.அமிர்தராஜா எழுதியுள்ளார், தேவா இசை அமைக்கிறார், அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.
"இது தற்போதைய கல்வியில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் பற்றிய கதை. அதனை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்கிறோம். வெளிநாட்டு கல்விக்கும், நம் நாட்டு கல்விக்குமான வித்தியாசத்தை காட்டுகிறோம். சென்னை, டில்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் படப்பிடிப்பு நடந்ததுள்ளது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடுகிறோம" என்கிறார் இயக்குனர் ராமநாராயணா.