பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
சானியா தாரா, நயன்தராவின் உறவுக்கார பெண் இல்லை. ஆனால் கேரளாவைச் சேர்ந்தவர். நலம்தானா என்ற படத்தின் மூலம் அறிமுகமானானர். அதன் பிறகு ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், அது வேற இது வேற, ஜீவா, அங்காளி பங்காளி போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த சங்கராபுரம், தகடு தகடு, மெய்மறந்தேன், கடை எண் 6, எல்லாம் நீயடி போன்ற படங்கள் எதுவும் வெளிவராமல் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது அவர் புழுதி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் நந்தா ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஏழுமலை இயக்கி உள்ளார், ராஜேஷ்அ இசை அமைத்துள்ளார், உமர் எழிலன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செவன் ஹில்ஸ் சினிமா தயாரித்துள்ளது. விரைவில் இந்தப் படம் வெளிவருகிறது. இந்த படத்தின் மூலமாகவாது சானியா தாரா மீண்டு வருவாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.