சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகியான சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னும் இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் சமந்தாவுக்கு திருமணமும் திரையுலகில் ஒரு ராசியாகவே அமைந்துவிட்டது. இதற்கு முன்பெல்லாம் திருமணமான நடிகையை திரையுலகைவிட்டே ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், சமந்தா திருமணம் ஆன பின் தான் அடுத்தடுத்து ஹிட்டுகளைக் கொடுத்து வருகிறார்.
'ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை' என திருமணத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த மூன்று படங்களுமே வசூலில் சாதனை புரிந்துள்ளன. திருமண ராசி சமந்தாவுக்கு நல்லதொரு வெற்றிகளைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், தற்போது தமிழில் இரண்டு படங்களை நடித்து முடித்துவிட்டு தமிழ், தெலுங்கில் 'யு டர்ன்' ரீமேக்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமந்தா நேற்று திடீரென அவருடைய திருமண வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அவருக்கும், நாகசைதன்யாவுக்கும் நடந்த திருமணத்தின் சில சுவாரசியமான காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. அதற்கு இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. இத்தனை மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட அவர்களின் வீடியோவிற்கு இவ்வளவு வரவேற்பா ?.