'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். அதன் பின் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தூத்துக்குடி சென்றர்.
இதில் கமல்ஹாசன் சென்றது கூட சர்ச்சையைக் கிளப்பவில்லை. ஆனால், ரஜினிகாந்த் சென்றது சர்ச்சையைக் கிளப்பியது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கார் மீது நின்று ரசிகர்களுக்கு அவர் கை அசைத்தது, சென்னை வந்து பத்திரிகையாளர்களிடம் ஆவசேமாகப் பேசியது சர்ச்சையானது. அதன் பின் ஆவேசமாகப் பேசியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மீடியாக்களுக்கும் தெரியாமல் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை அந்த ஊரில் பைக்கில் சென்று நள்ளிரவில் விஜய் சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் மொபைல் போன்களில் சிலர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின. விஜய்யின் இந்த அமைதியான பரபரப்பில்லாத பயணம் இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க விஜய் சென்ற விதம் அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.