சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அப்பா கார்த்திக்கும், மகன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து அப்பா, மகனாகவே நடித்திருக்கும் படம் மிஸ்டர் சந்திரமவுலி. ரெஜினா, வரலட்சுமி, சதீஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. படம் வருகிற ஜூலை மாதம் 6ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் திரு கூறியதாவது:
படம் துவங்கிய நாள் முதல் மிகவும் பாசிட்டிவாகவே இருந்து வருகிறது. மிஸ்டர் சந்திரமவுலியில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் பார்வையாளர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், அவர்கள் செலவழித்த நேரத்தை நிச்சயம் வீணாக்காது. பிஸியான நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது.
கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி, ரெஜினா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்த படத்தை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது என்றார்.