வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? | வா வாத்தியாருக்கு யு/ஏ சான்றிதழ்: ஆனாலும் பதைபதைப்பில் படக்குழு | இன்று ‛சேது' படத்துக்கு வயது 26 | தெலுங்கில் 'வா வாத்தியார்' படத்திற்கு வந்த சோதனை |

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜூம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
"போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொலை செய்யும் தமிழக அரசு வெட்கப்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையற்ற, முதுகெலும்பு இல்லாத அரசு. மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா. சுற்றுச்சூழல் பிரச்னையை முன்னிறுத்தி மக்கள் நடத்திய போராட்டம் கண்களில் படவில்லையா, அல்லது மத்திய அரசின் தாளத்திற்கு ஏற்றபடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மாநில அரசு ஆடிக்கொண்டிருக்கிறதா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.