பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார் பாலகுமாரன். இந்நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
தஞ்சை, திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தில், 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இதில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம்.
எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறார். "நாயகன், குணா, ஜென்டில்மேன், பாட்ஷா, காதலன், ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன், மன்மதன், வல்லவன், புதுப்பேட்டை" உள்ளிட்ட பல படங்களுக்கு வசனங்கள் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
1988-ம் ஆண்டு பாக்யராஜ், ஷோபனாவை வைத்து "இது நம்ம ஆளு" என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.