ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்குசாமி - விஷால் கூட்டணியில் 2005-ம் ஆண்டு வெளிவந்த வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி. இதன் இரண்டாம் பாகம் 12 ஆண்டுகளுக்கு கழித்து உருவாகி உள்ளது.
விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முக்கியமான வில்லி ரோலில் வரலட்சுமி நடித்திருக்கிறார். முதல்பாகத்தில் நடித்த ராஜ்கிரண், கஞ்சா கருப்பு ஆகியோர் இந்தப்படத்திலும் தொடருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. திருவிழா பின்னணயில் டிரைலர் ஆரம்பமாகிறது. 1.08 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் முழுக்க முழுக்க திருவிழாவை பின்னணியாக கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.
விஷாலின் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளுடன், ராஜ்கிரணின் கம்பீரமான வசனங்கள் மற்றும் வரலட்சுமியின் வில்லத்தனங்களும் இடம்பெற்றுள்ளனர்.
"இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை, தடுக்கதான் ஆரம்பிச்சிருக்கேன்" என விஷாலும், "இது ஆடு புலி ஆட்டமில்லை. ஆடும், புலியும் சேர்ந்து ஆடுற ஆட்டம்" என ராஜ்கிரணும் பஞ்ச் டயலாக் பேசியிருக்கின்றனர்.