ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ரேஜித். அதற்கு பிறகு சில மலையாளப் படங்களில் நடித்தவர், மலையாள சீரியல் நடிகர் ஆனார். 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்தவர், தற்போது "எம்பிரான்" என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா ப்ரீத்தி அறிமுகமாகிறார். இவர்களுடன் மவுலி, கல்யாணி நடராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம், மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள். தடையற தாக்க, மீகாமன் படங்களில் மகிழ் திருமேனியின் உதவியாளராக பணியாற்றிய கிருஷ்ண பாண்டி இயக்குகிறார். பிரசன் பாலா இசை அமைக்கிறார், புகழேந்தி ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, புதுச்சேரி, ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜூலை மாதம் படம் வெளிவருகிறது.