சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன். தற்போது இவர் தாதா 87 என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் கர்நாடவை சேர்ந்த ஒருவர் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில், தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினி அடுத்த முதல்வராக அதிகம் வாய்ப்புள்ளது. காரணம் அவரை மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள்.
ஆனால், கமலை அப்படி பார்க்கவில்லை. அதோடு, திராவிட கலாச்சாரம் இருக்கும் வரை மீண்டும் பார்ப்பனர்கள் முதல்வராக முடியாது. அதனால் தான் கமல் முதல்வராக வாய்ப்பில்லை.
நான் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிப்பவன் என்றபோதும் ரஜினியை கடவுள் என்றே கூறுகிறேன். ஆக, ரஜினி கட்சி ஆரம்பித்தால் நிச்சயமாக முதல்வர் ஆகி விடுவார் என்றார் சாருஹாசன்.